Friday, September 11, 2009

3D தொலைக்காட்சி தயாரிப்பில் SONY



பிரபல முன்னணி மின்னணு நிறுவனமான சோனி, 3D தொலைக்காட்சி தயாரிப்பில் இறங்குகிறது. இதன் பிரபல BRAVIA தொலைக்காட்சி வரிசையில் இதனை அறிமுகப்ப்பத்திகிறது.

வழக்கம் போல் இதில் 3D காட்சிகளை காண 3D கண்ணாடி அவசியம், மேலும் SONY நிறுவனம் BRAVIA மட்டுமில்லாமல் அதன் மற்ற தயாரிப்பான VIAO மடிக்கணினி,ப்ளு ரே படங்கள் மற்றும் விளையாட்டு சாதனமான PSP யிலும் 3D காட்சி நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறது.இதன் தயாரிப்புகள் 2010 ஆம் ஆண்டு இறுதியில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளது...

Friday, August 14, 2009

இரு திரை கேமரா





கேமரா உலகின் புதிய அறிமுகமாக Samsung நிறுவனம் இரு திரை கொண்ட கேமராவினை அறிமுகப்படுத்தியுள்ளது , இதிலென்ன விசேஷம் என்கிறீர்களா ?
ஆம் ஒரு திரை கேமராவின் முன்புறமும் மற்றொரு திரை வழக்கம் போல் கேமராவிற்கு பின்புறமும் அமைந்துள்ளது.

முன்புறம் உள்ள திரை மூலம் படம் எடுப்பவரையே படம் பிடிக்க உதவுகிறது, என்ன ஒரு ஆச்சர்யமான கண்டுபிடிப்பு என்கிறீர்களா !!!.
இனிமேல் நம்மை நாமே படம் பிடிக்க அடுத்தவர் உதவி தேவைப்படாது, மேலும் இதில் faceDetection வசதியுடன் வருவதால் நமது முகம் நிச்சயமாக திரையில் இருந்து விலக வாய்ப்பு குறைவு.


பொதுவாக குழந்தைகளை படம் பிடிப்பது என்பது சற்றே சிரமமான விஷயம், அவர்களை திரையை நோக்கி பார்க்கச் செய்வது மிகவும் கடினம்.ஆனால் இந்த கேமராவில் முன்பக்க திரையில் குழந்தைகளை கவர சில அனிமேஷன் படங்களை இடம் பெற செய்வது மூலம் அவர்களின் பார்வை கேமராவாய் நோக்கி இருக்கும். மேலும் 1,2,3 போன்ற count down இடம் பெறச் செய்வது மூலம் படம் பிடிக்கும் பொது நமது இமை மூடுவதை தவிர்க்க முடியும் .
இந்த கேமராவில் 12.2MP மெகாபிக்ஸல்,4.6x optical Zoom, image stabilization, 720p video capabilities in H.264 format.இதன் மற்றொரு முக்கிய சிறப்பம்சம் இது ஒரு தோடு திரை வசதி கொண்டது.அடுத்த மாதம் முதல் சந்தைக்கு வரவிருக்கிறது.

Friday, August 7, 2009

பாம்பன் பாலம் - புகைப்படம்

ராமேஸ்வரம் செல்லும் வழியில், பாம்பன் பாலத்தை கடந்து செல்லும் பொது ஒரு புகைவண்டி அந்த பாலத்தை கடந்து செல்லும் அழகை என் கை பேசியில் படமாக்கினேன்.... (படங்களை கிளிக் செய்து பெரியதாக்கி பார்க்கவும் )